Thursday, December 29, 2011

பீர்கங்காய் கூட்டு

பீர்கங்காய் கூட்டு
தேவையானவை:
பீர்கங்காய்-2
கடலைபருப்பு-1/4 கப்
சாம்பார் பொடி-2 ஸ்பூன்
 
அரைக்க:
தேங்காய் துருவல்-1/2 கப்
பச்சைமிளகாய்-2
சீரகம்-சிறிதளவு
 
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை
சின்ன வெங்கயம்-5
பூண்டு-2 பல்
 
செய்முறை:
*குக்கரில் பீர்கங்காய்,கடலைபருப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்து வைக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,அதில் சாம்பார் பொடியை சேர்த்து , அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொட்டி நன்கு வதக்கவும்.
*வேகவைத்து எடுத்து வைத்துள்ள பீர்கங்காயில் ,வதக்கி வைத்துள்ள பொருட்களை கொட்டி உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
 
 
 

Tuesday, December 27, 2011

சாக்லேட் சிப் பிஸ்கோட்டி

சாக்லேட் சிப் பிஸ்கோட்டி 
தேவையானவை:
மைதா மாவு-2 கப்
சர்க்கரை-3/4 கப்
வெண்ணை-2 ஸ்பூன்
முட்டை-2
சாக்லேட் சிப்-1/4 கப்.

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில்,முட்டை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்,பின்பு அதில் சர்க்கரை,வெண்ணை சேர்த்து கலக்கவும்.
*மைதாமாவில் சாக்லேட் சிப் கலந்து அதை சிறிது சிறிதாக முட்டை கலவைல் சேர்த்து கிண்டவும் .
 
*375 F ப்ரிஹீட்  செய்த ஓவன் ல் வைத்து 30-35 நிமிடம் பேக் செய்யவும்.
 
*பிஸ்கோட்டி நன்கு ஆறியதும் ,கத்தியால் வெட்டி பேகிங் ட்ரேயில்,அடுக்கி 10 நிமிடம் பேக் செய்யவும் .
 
*பின்பு பிஸ்கோட்டிகளை வெளியில் எடுத்து திருப்பி அடுக்கி மீண்டும் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். 
 
 

Wednesday, December 21, 2011

சாம்பார்

சாம்பார் 
தேவையானவை:
துவரம் பருப்பு-1 கப்
சின்ன வெங்காயம்-5
தக்காளி-2
மஞ்சள் பொடி-சிறிதளவு
சாம்பார் பொடி-1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-4 
புளி கரைசல்-1/2 கப்
 
தாளிக்க:
கடுகு
எண்ணை 
கருவேப்பில்லை
கொத்தமல்லிதழை 
சிகப்பு மிளகாய்
பெருங்காயம்
 
செய்முறை:
*குக்கரில் துவரம் பருப்பு,சின்ன வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,மஞ்சள் பொடி, சேர்த்து 5 விசில் விட்டு எடுத்து வைக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் புளி தண்ணீர் ,சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும் .
*பின்பு அதில் வேகவைத்த பருப்பை ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். 



Monday, December 12, 2011

வெண் பொங்கல்

வெண் பொங்கல்
தேவையானவை:
அரிசி-1 கப்
பாசி பருப்பு-1/4 கப்
தண்ணீர்-5 கப்
உப்பு-தேவைகேற்ப
தாளிக்க:
நெய்-1/4 கப்
மிளகு,சீரகம்-4 ஸ்பூன்
முந்திரி பருப்பு
கருவேப்பில்லை
செய்முறை:
*குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் பாசி பருப்பை சேர்த்து நன்கு  கொதித்தவுடன்,தேவையானளவு உப்பு,  அரிசியை சேர்த்து குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கவும்.

*பின்பு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து நன்கு கிண்டி சட்னி,சாம்பாருடன் பரிமாறவும். .

Wednesday, November 30, 2011

வெண்ணை பிஸ்கட் (butter cookies)

வெண்ணை பிஸ்கட் (butter cookies)
தேவையானவை:
மைதா மாவு-1 1/2 கப்
வெண்ணை-1/2 கப்
சர்க்கரை-3/4 கப்
முட்டை-1
 
செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்,அதனுடன் சர்க்கரை,வெண்ணையை சேர்த்து கலக்கவும்.
*பின்பு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிண்டவும்,இப்பொது மாவு சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும்.
*மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து,நடுவில் லேசாக அழுத்தி,பேகிங் ட்ரேயில் நன்கு இடைவெளி விட்டு வைக்கவும்.
 
*350 F ப்ரிஹீட் செய்த ஓவன் -ல் 13-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
 
*ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் பிஸ்கட்களை எடுத்து ஆறவிட்டு ,காற்று புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும்.  


 
 

Tuesday, November 22, 2011

பன்னீர் பிரியாணி


பன்னீர் பிரியாணி
தேவையானவை:
அரிசி-1 கப்
பன்னீர் துண்டுகள்-1 கப்
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2
தேங்காய் பால்-1/2 கப்
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி தழை-1 கப்
தாளிக்க:
பட்டை
சீரகம்


செய்முறை:
*கடாயில் நெய் ஊற்றி பட்டை,சீரகம் தாளித்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதில் தக்காளி,மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி,பன்னீர் துண்டுகளை சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கவும்.

*பின்பு அதில்,தேங்காய் பால்,புதினா,கொத்தமல்லிதழை சேர்த்து மசாலா நன்கு வதகியதும் தனியே வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அரிசி சேர்த்து வேகவிடவும் ,அரிசி முக்கால் பாகம் வெந்ததும், தனியே வடித்து வைக்கவும்.

*ஒரு ஓவன் ட்ரேயில் முக்கால் பாகம் வெந்த சாதம்,மசாலாவை சேர்த்து வைக்கவும்.

*350 டிகிரி ப்ரிஹீட் செய்த ஓவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

*பன்னீர் பிரியாணி ரெடி!!!   

Tuesday, November 15, 2011

ஸ்ட்ராபெரி ஜாம்


ஸ்ட்ராபெரி ஜாம்
தேவையானவை:
ஸ்ட்ராபெரி -15
சர்க்கரை-1 கப்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்

செய்முறை:
*ஸ்ட்ராபெரியை சிறு துண்டுகளாக வெட்டி அதில் சர்க்கரை கலந்து நன்கு கொதிக்கவிடவும்.

*ஸ்ட்ராபெரி நன்கு வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து விடவும்.

*பின்பு அதில் எலுமிச்சை சாரு ஊற்றி கெட்டியானதும் இறக்கவும். 
 

Thursday, November 10, 2011

ஓம பன்



ஓம பன்
தேவையானவை:
மைதா மாவு-1 1/2 கப்
ஓமம்-1 ஸ்பூன்
ஈஸ்ட்-1/2 ஸ்பூன்
சர்க்கரை-1 ஸ்பூன்
உப்பு-1 ஸ்பூன்
பால்-1/2 கப்
கொத்தமல்லிதழை-சிறிதளவு.
நெய்-1 ஸ்பூன்

செய்முறை:
*தண்ணீரில் ஓமம் சேர்த்து ஊறவைத்து நன்கு அரைத்து ஓம தண்ணீரை வடிகட்டி வைத்துகொள்ளவும்.
*வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட் ,சர்க்கரை,உப்பு கலந்து வைக்கவும்.
*மைதா மாவில்,ஓம தண்ணீர்,பால் கலவையை,சேர்த்து பிசைந்து 45 நிமிடம் ஊறவைக்கவும்.

*இப்பொது மாவு இரண்டு மடங்காக உப்பி இருக்கும்,அந்த மாவை நன்கு பிசைந்து,சிறு உருண்டைகளாக உருட்டி பேக் செய்யும் பாத்திரத்தில் 30 நிமிடம் வைக்கவும்.

*பின்பு பொடியாக நறுக்கிய கொதமல்லிதலையுடன் நெய் சேர்த்து ,உருட்டி வைத்துள்ள மாவின்மீது துவிவிடவும்.

*375 டிகிரி ப்ரிஹீட் செய்த ஓவன் யில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். 
ஓம பன் ரெடி !!!

Tuesday, November 1, 2011

கார அடை


கார அடை
தேவையானவை:
அரிசி-1 கப்
கடலை பருப்பு-1/2 கப்
துவரம் பருப்பு-1/4 கப்
பச்சை பயறு -1/4 கப்
பச்சை மிளகாய்-5
சிகப்பு மிளகாய்-5
வெங்காயம்-1
கொத்தமல்லிதழை
பெருங்காயம்
சீரகம்

செய்முறை:
*அரிசி,பருப்பு வகைகளை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
*ஊறிய அரிசி,பருப்பு உடன் மிளகாய்,சீரகம்,பெருகாயம்,உப்பு சேர்த்து அரைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலக்கி தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்.
 
 

Friday, October 21, 2011

பாதுஷா

தேவையானவை:
மைதா-2 கப்
வெண்ணை-1/2 கப்
தயிர்-2 ஸ்பூன்
பேகிங் சோடா -1/4 ஸ்பூன்
சர்க்கரை-1 ஸ்பூன் 
தண்ணீர்-மாவு பிசைவதற்கு
எண்ணை-பொரித்தெடுக்க 
சர்க்கரை பாகு:
சர்க்கரை-1/2 கப்
தண்ணீர் சிறிதளவு
எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில்  மைதா,வெண்ணை,தயிர்,பேகிங் சோடா ,சர்க்கரையை சேர்த்து பிசைந்து ,அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
*மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து நடுவில் லேசாக அழுத்தி அதன் ஓரகளை படத்தில் காட்டி உள்ளது போல் மடித்து விடவும்.

*கடாயில் எண்ணை ஊற்றி பாதுஷகலை பொரித்து எடுத்து கொள்ளவும் .
*வேறொரு கடாயில் சர்க்கரை சிறிது தண்ணீர் கலந்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி,அதில் எலுமிச்சை சாரு பிழிந்து  வைக்கவும்.
*பொரித்தெடுத்த பாதுஷாகளை சர்க்கரை பாகில்  போட்டு  எடுத்து தனியே வைக்கவும் .
*பாதுஷாக்கள் அறியதும் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
 

Thursday, October 20, 2011

காளான்,குடைமிளகாய் குர்மா


தேவையானவை:
காளான்
குடமிளகாய்
வெங்காயம்-1 
தக்காளி-2 
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன்
தேங்காய் பால் -1 கப் 
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்

தாளிக்க:
சீரகம்
கருவேப்பில்லை 
எண்ணை

செய்முறை:
*கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு அதில் தக்காளி சேர்த்து வதக்கி, காளான் ,குடமிளகாய்,மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி,உப்பு சேர்த்து நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும்.
*பின்பு அதில் தேங்காய் பால் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

சப்பாத்தி ,புலாவ் வுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Saturday, October 15, 2011

ரவா லட்டு

தேவையானவை:
ரவா-1 கப்
சர்க்கரை-1 கப்
நெய் -1/4 கப்
முந்திரி பருப்பு -10

செய்முறை:
*கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்தியை வறுத்து எடுத்து வைக்கவும் .
*அதே கடாயில் ரவா வை வாசனை வரும் வரை வறுத்து,ஆர வைத்து மிக்ஸ்யில் நன்கு பொடித்து வைத்து கொள்ளவும் .
*சர்க்கரையை தனியாக பொடித்து வைக்கவும் .
*ஒரு அகலமான பாத்திரத்தில் வருத்த முந்திரி,பொடித்த ரவா ,சர்க்கரை,மிதமாக சுடுபடுதிய நெய் ஆகியவற்றை சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.