Monday, May 24, 2010

மைதா சிப்ஸ்

மைதா சிப்ஸ்
தேவையானவை 
மைதா -1 கப்
மிளகாய் பொடி -1 ஸ்பூன் 
பெருகாயம் -சிறிதளவு 
வெண்ணை (அ)நெய் -1 ஸ்பூன் 
உப்பு -சிறிதளவு 
தண்ணீர் -மாவு பிசைவதற்கு
 எண்ணெய் -பொரித்தெடுக்க
செய்முறை
*மைதாமாவில் ,உப்பு,மிளகாய்பொடி ,பெருகாயம் ,வெண்ணை,சேர்த்து கலந்து அதில் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் 
*பின்பு மாவை சப்பாத்தி போல் தேய்த்து ,அதை கத்தியால் சிறு துண்டுகளாக கீறி எண்ணையில்
போட்டு போரிதேடுகவும் .

Thursday, May 20, 2010

ஆப்பம்

ஆப்பம்




தேவையானவை :

பச்சை அரிசி - 1 கப்

புழுங்கலரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்றவாறு

தேங்காய்ப்பால் - 1/4 கப்



செய்முறை:



*அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 6 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாக அரைத்தெடுக்கவும். அத்துடன் உப்பு போட்டுக் கரைத்து, இரவு முழுவதும் புளிக்க விடவும்.



*மறுநாள், மாவில் , 1/4 கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, தோசைமாவை விட சற்று நீர்க்க கரைக்கவும்.



*ஆப்பசட்டியை அடுப்பிலேற்றி சூடானதும் எண்ணையைத் தொட்டு ஆப்பச்சட்டியை துடைத்து விடவும். பின்னர் ஒரு பெரிய கரண்டி மாவை எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை இரு கைகளாலும் தூக்கி ஒரு சுற்று சுற்றினால் மாவு சட்டியைச் சுற்றி பரவி, விடும் பின்பு அடுப்பில் வைத்து மூடி ஆப்பம் வெந்ததும் எடுத்து விடவும் .

*ஆப்பதிற்கு தேங்காய்பால்அல்லது எதாவது பிடித்த சட்னியுடன் சாப்பிடலாம் .

Wednesday, May 12, 2010

கம்பு தோசை கைமா

கம்பு தோசை கைமா


தேவையானவை

தோசை செய்வதற்கு

கம்பு மாவு -2 கப்

உப்பு

தண்ணீர்

மசால் செய்வதற்கு

தக்காளி-2

வெங்காயம் -1

குடமிளகாய் -1

பச்சை மிளகாய் -4

பட்டாணி -கைபிடியளவு

கரம் மசாலா பொடி -1 ஸ்பூன்

இஞ்சி ,பூண்டு விழுது -1 ஸ்பூன்

எலுமிச்சை சாரு -3 ஸ்பூன்

தாளிக்க

பட்டை

கடுகு



*கம்பு மாவில் தண்ணீர் ,உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலந்து தோசைகளாக ஊற்றி சிறு துண்டுகளாக வெட்டிவைக்கவும்.

*வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை ,கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தக்காளி ,பச்சைமிளகாய் ,குடமிளகயை போட்டு வதக்கி பின்புஇஞ்சி பூண்டு விழுது , பட்டாணி ,கரம் மசாலா ,உப்பு போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் .

*பின்பு அதில் கம்பு தோசை துண்டுகளை போட்டு நன்கு கிளறி ,பின்பு எலுமிச்சை சாரு பிழித்து இறக்கவும் .

*கம்பு தோசை கைமாவை தயிர் பச்சிடியோடு பரிமாறலாம் .

Tuesday, May 4, 2010

காளான் குர்மா


காளான் குர்மா
தேவையானவை
காளான் -  2  கப் (நறுக்கியது )
தயிர்-1 கப்
பெரிய வெங்காயம் -1
மிளகாய் பொடி -1 ஸ்பூன்
மல்லி பொடி -1 ஸ்பூன்
எண்ணெய் -தேவைகேற்ப
உப்பு -தேவைகேற்ப
வதக்கி அரைக்க:
 பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
இஞ்சி,பூண்டு
பட்டை
தாளிக்க :
பட்டை ,கருவேப்பில்லை


*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்,      காளான்,மிளகாய் பொடி,மல்லி பொடி,உப்பு  போட்டு வதக்கி கொள்ளவும் .

* பின்பு  வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து ,அரைத்த விழுதை கொட்டி ,எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

*பின்பு தயிரில் தேவையான அளவு தண்ணீர்  கலக்கி அதில் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும் .