Thursday, May 20, 2010

ஆப்பம்

ஆப்பம்




தேவையானவை :

பச்சை அரிசி - 1 கப்

புழுங்கலரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்றவாறு

தேங்காய்ப்பால் - 1/4 கப்



செய்முறை:



*அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 6 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாக அரைத்தெடுக்கவும். அத்துடன் உப்பு போட்டுக் கரைத்து, இரவு முழுவதும் புளிக்க விடவும்.



*மறுநாள், மாவில் , 1/4 கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, தோசைமாவை விட சற்று நீர்க்க கரைக்கவும்.



*ஆப்பசட்டியை அடுப்பிலேற்றி சூடானதும் எண்ணையைத் தொட்டு ஆப்பச்சட்டியை துடைத்து விடவும். பின்னர் ஒரு பெரிய கரண்டி மாவை எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை இரு கைகளாலும் தூக்கி ஒரு சுற்று சுற்றினால் மாவு சட்டியைச் சுற்றி பரவி, விடும் பின்பு அடுப்பில் வைத்து மூடி ஆப்பம் வெந்ததும் எடுத்து விடவும் .

*ஆப்பதிற்கு தேங்காய்பால்அல்லது எதாவது பிடித்த சட்னியுடன் சாப்பிடலாம் .

No comments:

Post a Comment