Wednesday, May 12, 2010

கம்பு தோசை கைமா

கம்பு தோசை கைமா


தேவையானவை

தோசை செய்வதற்கு

கம்பு மாவு -2 கப்

உப்பு

தண்ணீர்

மசால் செய்வதற்கு

தக்காளி-2

வெங்காயம் -1

குடமிளகாய் -1

பச்சை மிளகாய் -4

பட்டாணி -கைபிடியளவு

கரம் மசாலா பொடி -1 ஸ்பூன்

இஞ்சி ,பூண்டு விழுது -1 ஸ்பூன்

எலுமிச்சை சாரு -3 ஸ்பூன்

தாளிக்க

பட்டை

கடுகு



*கம்பு மாவில் தண்ணீர் ,உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலந்து தோசைகளாக ஊற்றி சிறு துண்டுகளாக வெட்டிவைக்கவும்.

*வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை ,கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தக்காளி ,பச்சைமிளகாய் ,குடமிளகயை போட்டு வதக்கி பின்புஇஞ்சி பூண்டு விழுது , பட்டாணி ,கரம் மசாலா ,உப்பு போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் .

*பின்பு அதில் கம்பு தோசை துண்டுகளை போட்டு நன்கு கிளறி ,பின்பு எலுமிச்சை சாரு பிழித்து இறக்கவும் .

*கம்பு தோசை கைமாவை தயிர் பச்சிடியோடு பரிமாறலாம் .

No comments:

Post a Comment