Thursday, March 24, 2011

croissant கைமா

croissant கைமா
தேவையானவை:
croissant-3
தக்காளி-2
வெங்காயம் -1
குடமிளகாய் -1
பச்சை மிளகாய் -4
பட்டாணி -கைபிடியளவு
கரம் மசாலா பொடி -1 ஸ்பூன்
இஞ்சி ,பூண்டு விழுது -1 ஸ்பூன்
எலுமிச்சை சாரு -3 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை

செய்முறை:
*croissant ஐ  சிறு துண்டுகளாக வெட்டிவைக்கவும்.
*வாணலியில் எண்ணை  ஊற்றி  கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தக்காளி ,பச்சைமிளகாய் ,குடமிளகயை போட்டு வதக்கி பின்புஇஞ்சி பூண்டு விழுது , பட்டாணி ,கரம் மசாலா ,உப்பு போட்டு நன்கு  வதக்கவும் .
*பின்பு அதில் croissant துண்டுகளை போட்டு நன்கு கிளறி ,பின்பு எலுமிச்சை சாரு பிழித்து இறக்கவும் .  



ரவா கார பணியாரம்


ரவா கார பணியாரம்
தேவையானவை:
ரவா-1 கப்
தயிர்-1 கப்
அரிசி மாவு -1/4 கப்
காரட்,பட்டாணி -1 கப்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கருவேப்பில்லை
பெருகாயம்
செய்முறை:
ரவா,தயிர்,அரிசி மாவு மூன்றையும் நன்கு கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்,பின்பு அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,காரட்,பட்டாணி ,உப்பு சேர்த்து பணியாற சட்டியில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.