Monday, June 28, 2010

மசாலா கத்தரிக்காய்

மசாலா கத்தரிக்காய்


தேவையானவை :

கத்தரிக்காய்

வெங்காயம் -4

தக்காளி -1

இஞ்சி,பூண்டு விழுது -1 ஸ்பூன்

பச்சை மிளகாய் -5 (பொடியாக நறுக்கியது )

கொத்தமல்லி பொடி -2 ஸ்பூன்


தாளிக்க :

எண்ணெய்

கடுகு

கருவேப்பில்லை



செய்முறை :

*கத்தரிகாயை அடுப்பில் நன்கு சுட்டு மேலுள்ள தோல் பகுதியை எடுத்துவிட்டு ,சதை பகுதியை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துகொள்ளவும் .

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,நறுக்கிய வெங்காயம் ,தக்காளி பச்சைமிளகாய் போட்டு வதக்கி ,இஞ்சி பூண்டு விழுது ,கொத்தமல்லி பொடி,உப்பு போட்டு நன்கு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி கொதுகவிடவும் .

*மசாலா நன்கு கொதித்ததும் கத்தரிக்காய் போட்டு 3 நிமிடம் கொதிகவிட்டு இறக்கவும் .

Wednesday, June 16, 2010

ரவா இட்லி

ரவா இட்லி (rava idli)
தேவையானவை :
ரவா -2 கப்
தயிர்-2 கப்
காரட்-1/2 கப் (துருவியது)
பட்டாணி -1/2 கப்
 கொத்தமல்லி தழை-1 கப் (பொடியாக நறுக்கியது )
இஞ்சி -சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -4 (பொடியாக நறுக்கியது )
தாளிக்க :
கடுகு 
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு 
கருவேப்பிலை 
சிகப்புமிளகாய் 
பெருகாயம் 
எண்ணெய்  
செய்முறை :
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் ரவா சேர்த்து வாசம் வரும்வரை வறுக்கவும் .
*பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் தயிர் ஊற்றி அதில் வருத்த  ரவா கலவையை கொட்டி ,
பட்டாணி ,காரட்,இஞ்சி,பச்சைமிளகாய் ,கொத்தமல்லிதழை ,உப்பு சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைத்து ,அதைஇட்லி தட்டில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும் .
 
குறிப்பு:
ரவாஇட்லியை வேறொரு முறையிலும் செய்யலாம் ,ரவாவை தைரில் 1மணி நேரம் ஊரவிட்டு பின்பு 
தாளித்து இட்லி தட்டில் ஊற்றி எடுக்கலாம். 
 

Thursday, June 10, 2010

காரட் ஹல்வா

காரட் ஹல்வா (carrot halwa)
தேவையானவை:
காரட் -3 கப் (துருவியது )
பால் -3 கப் 
சர்க்கரை -1 கப் 
நெய் -2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி -சிறிதளவு
செய்முறை :
*2 ஸ்பூன் நெய்ல் துருவிய காரட் போட்டு வதக்கி ,அதில் 3 கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும் .
*பால்   நன்கு  சுண்டியதும்  சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் 
கிண்டி ,ஏலக்காய் பொடி போட்டு இறகிவிடவும் .  

Thursday, June 3, 2010

பன்னீர் மசாலா


பன்னீர் மசாலா
தேவையானவை 
பன்னீர் செய்வதற்கு :
பால் -6 கப்
எலுமிச்சை சாறு -4 ஸ்பூன் 
மசாலா செய்வதற்கு:
வெங்காயம் -2
தக்காளி -2
பச்சைமிளகாய் -2
பால்-1 கப்
  வெண்ணெய்-1  ஸ்பூன் 
 
 மிளகாய் பொடி -1 ஸ்பூன்
மல்லி பொடி -1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி -1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
தாளிக்க :
பட்டை ,கருவேப்பில்லை


செய்முறை :
*6 கப் பாலை 15 நிமிடம் காய்ச்சவும் ,பால் சிறிது சுண்டியதும் அதில் எலுமிச்சை சாருடன் சிறிது தண்ணீர் கலந்து ஊற்றினால் பால் திரிந்துவிடும் ,பின்பு திரிந்த பாலிலிருந்து தண்ணீரை வடித்துவிட்டு பாலாடையை  ஒரு துணியில் போட்டு சுற்றி அதன்மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைக்கவும் ,1 மணி நேரத்தில் பாலாடை இறுகிவிடும் ,இப்பொது பாலாடை கட்டியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும் ,இப்பொது பன்னீர் தயார் .

* வெங்காயம் ,தக்காளியை  வதக்கி  ஆறவிட்டு நன்கு அரைத்து எடுக்கவும்  .

*   ஒரு கடாயில் 1 ஸ்பூன் வெண்ணை போட்டு அதில் பட்டை கருவேப்பில்லை தாளித்து பின்பு வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது ,உப்பு போட்டு வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் ,தக்காளி விழுதை கொட்டி 10 நிமிடம் கொதிக்கவிடவும் .

*பின்பு 1 கப் பாலில் மிளகாய் பொடி ,மல்லி பொடி ,கரம் மசாலா பொடி போட்டு கலந்து கொதிக்கும் மசாலாவில் கலந்து 2 நிமிடம் கொதிக்க விடவும் .

*பின்பு பன்னீர் துண்டுகளை சேர்த்து இறகிவிடவும் .
 
 குறிப்பு :
பன்னீர் துண்டுகளை மசாலாவில் சேர்பதற்கு முன்பு எண்ணெயில் பொரித்தும் சேர்க்கலாம் .