Tuesday, October 26, 2010

லிட்டில் ஹாட்ஸ் பிஸ்கட்

லிட்டில் ஹாட்ஸ் பிஸ்கட்


தேவையானவை:

பஃப் பேஸ்ட்ரி ஷீட் -2

சர்க்கரை - 4 ஸ்பூன்

செய்முறை:

*பேஸ்ட்ரி ஷீட்டை 1 மணி நேரம் முன்பாக பிரீசரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.

*மாவு தூவி பேஸ்ட்ரி ஷீட்-ஐ சதுரமாகத் தேய்த்துக் கொள்ளவும்.

*அதன் மேல் சர்க்கரை தூவி படத்தில் காட்டி உள்ளது போல் மடிக்கவும்.



 *ரோல் செய்த பேஸ்ட்ரி ஷீட்டை பதினைந்து நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்
*பேஸ்ட்ரி ரோல்ஐ பிரீசரில் இருந்து எடுத்து படத்தில் காட்டி உள்ளது போல்  நறுக்கி பேக்கிங் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும்.
 
*375F ப்ரீ ஹீட் செய்த அவன்-ல் வைத்து  பேக் செய்யவும்,பத்து நிமிடம் கழித்து பிஸ்கட் களை திருப்பி அடுக்கி மீண்டும் பத்து நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.


Friday, October 22, 2010

பகர பைங்கன் (Bagara Baingan)

பகர பைங்கன் (Bagara Baingan)


தேவையானவை :

கத்தரிக்காய்-7

வெங்காயம் - 1

தக்காளி -2

பச்சைமிளகாய் -4

கரம் மசாலா பொடி-1 ஸ்பூன்

இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன்



வறுத்து அரைக்க:

தேங்காய் துருவல்-1 /4 கப்

வேர்கடலை-1 /4 கப்

எள்ளு -1 /4 கப்

சிகப்பு மிளகாய் -3

கடலை பருப்பு -2 ஸ்பூன்

சீரகம்-1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை-2 ஸ்பூன்

பட்டை -2

அரைக்க :

வெங்காயம் -1

புதினா,கொத்தமல்லி-கைபிடியளவு

புளி கரைசல் -1 /4 கப்

செய்முறை:

*கத்தரிக்காயை பின்புறம் நான்காக கீறி ,கடாயில் 4 ஸ்பூன் எண்ணை விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும் .

*கடாயில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், தக்காளி,உப்பு , பச்சைமிளகாய் ,இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும் .

*அதில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து கொட்டி ,எண்ணை பிரியும் வரை வதக்கவும் .

*பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் கத்தரிக்காய்,கரம் மசாலா போட்டு, 10 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.

Monday, October 4, 2010

பாதாம் கேக்


 
 
பாதாம்  கேக்
தேவையானவை:
கோதுமை மாவு - 1 கப்
வெண்ணை -1 /2 கப்
பாதாம்  பருப்பு -10 (சிறுதுண்டுகளாக நறுக்கியது )
சர்க்கரை -3 /4 கப்
பால் -1 /4 கப்

செய்முறை :
*பாத்திரத்தில் வெண்ணை, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும் பின்பு அதில் கோதுமை மாவு,பாதாம்  துண்டுகள்,பால் சேர்த்து கலக்கி வைக்கவும்
*கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணை தடவி ,கலவையை ஊற்றி  ஓவன்-ல்  375 டிகிரி F ல்  50நிமிடம் bake செய்து எடுக்கவும் .