பகர பைங்கன் (Bagara Baingan)
தேவையானவை :
கத்தரிக்காய்-7 
வெங்காயம் - 1 
தக்காளி -2
பச்சைமிளகாய் -4 
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன் 
இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன் 
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல்-1 /4 கப் 
வேர்கடலை-1 /4 கப் 
எள்ளு -1 /4 கப் 
சிகப்பு மிளகாய் -3 
கடலை பருப்பு -2 ஸ்பூன் 
சீரகம்-1 ஸ்பூன் 
கொத்தமல்லி விதை-2 ஸ்பூன் 
பட்டை -2 
அரைக்க :
வெங்காயம் -1 
புதினா,கொத்தமல்லி-கைபிடியளவு 
புளி கரைசல் -1 /4 கப் 
செய்முறை:
*கத்தரிக்காயை பின்புறம் நான்காக கீறி ,கடாயில் 4 ஸ்பூன் எண்ணை விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும் .
*கடாயில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், தக்காளி,உப்பு , பச்சைமிளகாய் ,இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும் .
*அதில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து கொட்டி ,எண்ணை பிரியும் வரை வதக்கவும் .
*பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் கத்தரிக்காய்,கரம் மசாலா போட்டு, 10 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
Friday, October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment