Sunday, October 13, 2013

நெல்லிக்காய் தொக்கு

நெல்லிக்காய் தொக்கு

தேவையானவை:
பெரிய நெல்லிக்காய்-20
நல்ல எண்ணை -1/2 கப்
கடுகு
கருவேப்பில்லை
உப்பு -தேவையானவை 
மிளகாய்பொடி -3/4 கப்
வெந்தயபொடி -1/2 ஸ்பூன்
மஞ்சள்பொடி -சிறிதளவு

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேகவிடவும் .
* நெல்லிக்காய்  நன்கு வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு  ,அதிலுள்ள கொட்டைகளை நீக்கி,நெல்லிக்காயை நன்கு மசித்து வைத்துகொள்ளவும் .
*ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு ,கருவேப்பில்லை சேர்த்து தாளித்து ,அதில் மசித்து வைத்த நெல்லிக்காய் ,மிளகாய் பொடி ,வெந்தயபொடி ,மஞ்சள் பொடி ,உப்பு ,பெருங்காய பொடி சேர்த்து நன்கு வதக்கவும் .
*நெல்லிக்காய் நன்கு வதங்கி ,எண்ணை பிரிந்து வந்ததும் இறக்கவும் .

Monday, January 28, 2013

ரவா தோசை

ரவா தோசை

தேவையானவை:
ரவா - 1 கப் 
அரிசி மாவு -1/2 கப் 
மைதா மாவு-1/4 கப் 
மிளகு -10
சீரகம்-1 ஸ்பூன் 
பச்சை மிளகாய்-2
துருவிய  இஞ்சி -1 ஸ்பூன் 
கருவேப்பில்லை-10
உப்பு
தண்ணீர்-4 கப்
  

செய்முறை:

*பாத்திரத்தில் ரவா,அரிசி மாவு,மைதா மாவு ,உப்பு , 4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*பின்பு அதில் ஒன்றிரண்டாக பொடித்த மிளகு ,சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ,இஞ்சி,கருவேப்பில்லை சேர்த்து நீர்க்க கரைத்து ,தோசை கல்லில்  மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும் .