Saturday, August 18, 2012

சாம்பார் பொடி


சாம்பார் பொடி
தேவையானவை:
சிகப்பு மிளகாய்-1 கப்
கொத்தமல்லி விதை-1 /2 கப்
சீரகம்-2 ஸ்பூன்
அரிசி-2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2 ஸ்பூன்
வெந்தயம்-1 /4 ஸ்பூன்
பெருங்காயம் -சிறிதளவு
மஞ்சள் பொடி-2 ஸ்பூன்
செய்முறை:
*அனைத்து பொருட்களையும் (மஞ்சள் பொடி தவிர ) வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
*ஆறியதும் ,மஞ்சள் பொடி சேர்த்து ,மிக்ஸ்யில் நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.

Thursday, July 26, 2012

புளி சாதம்

புளி சாதம் 
தேவையானவை:
சாதம்-1 கப்
புளி காய்ச்சல் செய்வதற்கு:
புளி கரைசல்-2 கப்
மஞ்சள் பொடி-1 / 2 ஸ்பூன் 
நிலக்கடலை -1 /4 கப் 


வறுத்து பொடிக்க:
சிகப்பு மிளகாய்-10 
கொத்தமல்லி விதை-1 ஸ்பூன்
வெந்தயம்-1 /2 ஸ்பூன்
எள்ளு-1 ஸ்பூன்

தாளிக்க:
நல்லஎண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
சிகப்பு மிளகாய்
கருவேப்பில்லை
பெருகாயம்

செய்முறை:
*கடாயில் சிறிது  எண்ணை ஊற்றி ,வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை,தனி தனியாக வறுத்து, பொடித்து வைத்து கொள்ளவும்.
*கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,அதில் புளி கரைசலை ஊற்றி ,மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*புளி கரைசல் நன்கு சுண்டியதும் அடுப்பை நிறுத்தி  ,பொடித்து வைத்துள்ள பொடி,நிலக்கடலை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
*நன்கு ஆரிய சாதத்தில் தேவையான அளவு புளி காய்ச்சல் ,சிறிது  நல்லஎண்ணெய் சேர்த்து கிண்டி பரிமாறவும்.

Wednesday, June 20, 2012

வெஜிடபிள் பன்னீர்

வெஜிடபிள் பன்னீர் 
தேவையானவை:
பன்னீர் துண்டுகள்-1 கப்
இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன் 
வெங்காயம்-1
தக்காளி விழுது-1 கப்
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன் 
குடமிளகாய்-1
பச்சைபட்டாணி-சிறிதளவு
காரட்-1 
 
தாளிக்க:
எண்ணை
சீரகம் 
 
செய்முறை:
*கடாயில் எண்ணை ஊற்றி சீரகம்,வெங்காயம் சேர்த்து வதக்கவும் ,பின்பு அதில் இஞ்சி பூண்டு,தக்காளி விழுது ,மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு அதில் நறுக்கிய குடைமிளகாய்,காரட்,பச்சைபட்டாணி ,தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும்,பன்னீர் துண்டுகளை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்.

Friday, May 25, 2012

குடைமிளகாய் பஜ்ஜி

குடைமிளகாய் பஜ்ஜி  
தேவையானவை:
கடலை மாவு-1 கப்
அரிசி மாவு-1/2 கப்
பேகிங் சோடா-சிறிதளவு
உப்பு
எண்ணை-பொரித்தெடுக்க 
அரைக்க:
சிகப்பு மிளகாய்-2
பூண்டு-2 பல்
சோம்பு-1/2 ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில்,கடலை மாவு,அரிசி மாவு,பேகிங் சோடா,உப்பு சேர்த்து கலக்கவும்.
* அதில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்த்து தோசை மாவு பதத்திற்கு ,தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
*குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிவைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் எண்ணை சூடுசெய்து ,குடை மிளகாயை பஜ்ஜி மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரிதெடுகவும்.
குறிப்பு:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களுக்கு பதிலாக ,பெருங்காயம்,மிளகாய் பொடியை ,மாவில் சேர்த்தும் பஜ்ஜி செய்யலாம்.

Wednesday, March 7, 2012

தேங்காய் பால் புலாவ்

தேங்காய் பால் புலாவ்
தேவையானவை:
அரிசி-2 கப்
தேங்காய் துருவல் -2 கப்
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
பச்சை பட்டாணி -1 கப்
புதினா,கொத்தமல்லிதழை 
 
தாளிக்க:
நெய் -3 ஸ்பூன்
சீரகம்
பட்டை 
 
செய்முறை:
* தேங்காய் துருவலை நன்கு அரைத்து ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்து கொள்ளவும் .
*குக்கரில் நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துஉள்ள பொருட்களை தாளித்து ,வெங்காயம்,பச்சை மிளகாய் ,பச்சைபட்டாணி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் .
*அதில் தேங்காய் பால், அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பு,புதினா,கொத்தமல்லிதழை  சேர்த்து ,குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
*தேங்காய் பால் புலாவ் , பன்னீர் மசாலா உடன் சாப்பிட நன்றாக இருக்கும் .
 

Friday, January 20, 2012

பஜ்ஜி மிளகாய் குர்மா (mirchi ka salan)

பஜ்ஜி மிளகாய் குர்மா (mirchi ka salan)
தேவையானவை:
பஜ்ஜி மிளகாய்-5
வெங்காயம் - 1 
தக்காளி -2
மிளகாய் பொடி-1 ஸ்பூன்
சீரகபொடி-1 ஸ்பூன் 
மஞ்சள் பொடி-1/2 ஸ்பூன் 
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன் 
இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன்
புளி தண்ணீர்-1/2 கப் 
 
 வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல்-1 /2 கப்
வேர்கடலை-1 /4 கப் 
எள்ளு -2 ஸ்பூன்  
சிகப்பு மிளகாய் -3
கடலை பருப்பு -2 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை-2 ஸ்பூன்
 
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை
 
செய்முறை:
*கடாயில் எண்ணை ஊற்றி பஜ்ஜி மிளகாயை வதக்கி தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
 
*அதே கடாயில் கடுகு,கருவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் பின்பு அதில் தக்காளி,மிளகாய் பொடி,சீரகபொடி,மஞ்சள் பொடி, கரம் மசாலாவை சேர்த்து எண்ணைபிறியும் வரை வதக்கவும்.
 
*பின்பு அதில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொட்டி,புளி தண்ணீர் சேர்த்து 20 நிமிடம்  நன்கு கொதிக்கவிடவும்.
 
*பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மிளகாயை சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
 
*இந்த குர்மாவை பிரியாணி,புலாவ் வுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
 

Wednesday, January 11, 2012

உருளைக்கிழங்கு கோப்தா கறி


உருளைக்கிழங்கு கோப்தா கறி
தேவையானவை:
உருளைக்கிழங்கு-2 கப் (வேகவைத்து மசித்தது)
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
சோள மாவு-3 ஸ்பூன்
உப்பு-தேவைகேற்ப
கொத்தமல்லி இலை
எண்ணை-பொரித்தெடுக்க
கிரீம்-1/4 கப்.

வதக்கி அரைக்க:
வெங்காயம்-1
தக்காளி-3
மிளகாய் பொடி-1 ஸ்பூன்
கொத்தமல்லி பொடி-1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 spoon
இஞ்சி,பூண்டு விழுது

தாளிக்க:
சீரகம்
கருவேப்பில்லை

செய்முறை:
*உருளைகிழங்கை வேகவைத்து,மசித்து அதனுடன் மிளகாய் பொடி,உப்பு,கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து வைக்கவும்.
*அதிலிருந்து சிறு உருண்டை எடுத்து சோள மாவில் பிரட்டி வைக்கவும்.

*அந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்.


*கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம்,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது, பொடி வகைகளை சேர்த்து வதக்கி, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.

*கடாயில் எண்ணை ஊற்றி சீரகம்,கருவேப்பில்லை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் .

*பின்பு அதில் கிரீம் சேர்த்து கொதித்ததும்,அடுப்பை நிறுத்தி ,பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து இறக்கவும்.


*உருளைக்கிழங்கு கோப்தாவை ப்ளைன் புலாவ்,சப்பாத்தி உடன் பரிமாறலாம்.



Sunday, January 1, 2012

சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல் 
தேவையானவை:
அரிசி-1 கப்
பாசி பருப்பு-1/4 கப்
வெல்லம்-1 1/2 கப்
முந்திரிபருப்பு-10
நெய்-1/4 கப்
ஏலக்காய் பொடி-சிறிதளவு
 
செய்முறை:
*குக்கரில் அரிசி,பருப்பு,4 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து வைக்கவும்.
*முந்திரிபருப்பை நெய்-யில் வறுத்து வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிது தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.வெல்லம் தண்ணீரில் நன்கு கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
*பின்பு வேகவைத்துள்ள அரிசி,பருப்பு கலவையில் வெல்ல தண்ணீரை ஊற்றி , நெய் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு ,கெட்டியானதும் நெய்- யில் வருத்த முந்திரி,ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.