Friday, January 20, 2012

பஜ்ஜி மிளகாய் குர்மா (mirchi ka salan)

பஜ்ஜி மிளகாய் குர்மா (mirchi ka salan)
தேவையானவை:
பஜ்ஜி மிளகாய்-5
வெங்காயம் - 1 
தக்காளி -2
மிளகாய் பொடி-1 ஸ்பூன்
சீரகபொடி-1 ஸ்பூன் 
மஞ்சள் பொடி-1/2 ஸ்பூன் 
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன் 
இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன்
புளி தண்ணீர்-1/2 கப் 
 
 வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல்-1 /2 கப்
வேர்கடலை-1 /4 கப் 
எள்ளு -2 ஸ்பூன்  
சிகப்பு மிளகாய் -3
கடலை பருப்பு -2 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை-2 ஸ்பூன்
 
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை
 
செய்முறை:
*கடாயில் எண்ணை ஊற்றி பஜ்ஜி மிளகாயை வதக்கி தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.
 
*அதே கடாயில் கடுகு,கருவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் பின்பு அதில் தக்காளி,மிளகாய் பொடி,சீரகபொடி,மஞ்சள் பொடி, கரம் மசாலாவை சேர்த்து எண்ணைபிறியும் வரை வதக்கவும்.
 
*பின்பு அதில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொட்டி,புளி தண்ணீர் சேர்த்து 20 நிமிடம்  நன்கு கொதிக்கவிடவும்.
 
*பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மிளகாயை சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
 
*இந்த குர்மாவை பிரியாணி,புலாவ் வுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
 

No comments:

Post a Comment