Monday, August 30, 2010

பாசிப்பருப்பு கேக்

 
பாசிப்பருப்பு கேக்

தேவையானவை :
பாசிப்பருப்பு -1/2 கப்
வேர்கடலை -1/4 கப் (வேர்கடலையை வறுத்து ஒன்று இரண்டாக மிக்ஸ்யில் போட்டு அடித்து கொள்ளவும் )
மைதா மாவு-1/4 கப்
முட்டை -1
வெண்ணை -2 ஸ்பூன்
சர்க்கரை -3/4 கப்
பால்-3 ஸ்பூன்

செய்முறை:
*பாசிபருப்பை நன்கு மிக்ஸ்யில் போட்டு மாவாக்கி கொள்ளவும் .
*பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு கலக்கவும் ,அதனுடன் சர்க்கரை ,மைதா ,பாசிப்பருப்பு மாவு ,வெண்ணெய்,பொடித்த வேர்கடலை ,பால் ஆகியவற்றை  நன்கு  கலக்கி கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணை தடவி ஊற்றி வைக்கவும்.
*Oven-யில் 350 டிகிரி F யில் 40 -50 நிமிடம் bake செய்து எடுக்கவும் .

Wednesday, August 25, 2010

வாழக்காய் தேங்காய் கூட்டு


வாழக்காய் தேங்காய் கூட்டு
தேவையானவை :
வாழக்காய் -2
தேங்காய் பூ -1 /2 கப்
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது )
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது )
இஞ்சி -சிறிதளவு
வறுத்து அரைக்க :
சிகப்பு மிளகாய் -3
கொத்தமல்லிவிதை -2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை

செய்முறை:
 *வாழக்காயை தொலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாகி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காய் ,இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் .
*கடுகு ,கருவேப்பில்லை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த தேங்காய் விழுது ,உப்பு  சேர்த்து வதக்கவும்.
*மசாலாவிலிருந்து எண்ணை பிரிந்ததும் வாழக்காய் துண்டுகளை போட்டு ,5 நிமிடம் பிரட்டி  இறக்கவும்.   

Wednesday, August 18, 2010

எண்ணை கத்தரிக்காய்

எண்ணை  கத்தரிக்காய்
தேவையானவை:
சிறிய கத்தரிக்காய் -6
மிளகாய் தூள் -1  ஸ்பூன்
சம்பார்பொடி -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிதளவு
உப்பு -சிறிதளவு
எண்ணை -பொரித்தெடுக்க

செய்முறை:
*கத்தரிக்காயை  காம்பை  நீக்கிவிட்டு இருபுறமும் இரண்டாக கீரிகொள்ளவும் .
*மிளகாய் பொடி,மஞ்சள் தூள்,சாம்பார் பொடி ,உப்பு அவற்றுடன் சிறிது தண்ணீர் கலந்து கத்தரிக்காயினுள் வைத்து அரை மணி  நேரம் உறவிடவும் .
*பின்பு கத்தரிக்காயை எண்ணெயில் பொரிதெடுகவும்.  


எண்ணை கத்தரிக்காய் பருப்பு சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்

Tuesday, August 3, 2010

கத்தரிக்காய் வேர்க்கடலை மசாலா


கத்தரிக்காய் வேர்க்கடலை மசாலா


தேவையானவை :

கத்தரிக்காய் -5

எண்ணெய் -4 ஸ்பூன்

புளி -சிறிதளவு

வதக்கி அரைக்க :

பெரிய வெங்காயம் -1

வறுத்து அரைக்க :

கொத்தமல்லி விதை -2 ஸ்பூன்

வேர்க்கடலை -கைபிடியளவு

எள்ளு -2 ஸ்பூன்

சிகப்பு மிளகாய் -4

பட்டை -2

ஏலக்காய் -2


செய்முறை :

*கத்தரிக்காய் காம்பை நீக்கிவிட்டு அதன் பின்புறம் நான்காக கீரிவைகவும் .

*வெங்காயத்தை நன்கு வதக்கி அரைத்து வைத்துகொள்ளவும் .

*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை கலந்து வைத்துகொள்ளவும் .

*கத்தரிக்காயினுள் அரைத்து வைத்துள்ள மசாலாவை வைத்து ,அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிறு தீயில் மூடிவைத்து கத்தரிக்காய்களை வேகவிடவும்.(2 நிமிடத்திற்கு ஒருமுறை திருப்பிவிட்டு வேகவிடவும் )

*கத்தரிக்காய் நன்கு வெந்ததும் மீதம் உள்ள மசாலாவை ஊற்றி,உப்பு போட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும் .

*பின்பு புளி தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும் .