Thursday, July 9, 2015

இட்லி கைமா

 
 
இட்லி கைமா 
தேவையானவை :
 
இட்லி -4
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன் 
வெங்காயம் -1
தக்காளி -1
பட்டாணி -1/2 கப் 
மிளகாய் தூள் -1 ஸ்பூன் 
கொத்தமல்லி பொடி -1 ஸ்பூன் 
மஞ்சள் பொடி -1/2 ஸ்பூன் 
 
தாளிக்க  :
எண்ணை 
கருவேப்பில்லை 
பட்டை 
 
செய்முறை :
* இட்லி சிறு துண்டுகளாகி  எண்ணெயில் நன்கு பொரித்தெடுத்து  கொள்ளவும் .
 
*கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை  தாளித்து ,அதில் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது ,தக்காளி ,பட்டாணி சேர்த்து வதங்கியதும் அதில் பொடி வகைகளை சேர்த்து  வதக்கவும் .
 
*பின்பு அதில் உப்பு சேர்த்து ,பொரித்து வைத்துள்ள இட்லி ,கொத்தமல்லி இலை  சேர்க்கவும் .


 

Saturday, April 5, 2014

வேர்க்கடலை சட்னி


வேர்க்கடலை  சட்னி
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை -1/2 கப்
தேங்காய் துருவல்-1/2கப்
சிகப்புமிளகாய் -2
பூண்டு-சிறிய துண்டு
உப்பு -1/2 ஸ்பூன்
தாளிக்க :
எண்ணை
கடுகு
கருவேப்பில்லை
உளுந்தம்ப்பருப்பு
பெருங்காயம்

செய்முறை :
வேர்க்கடலை,தேங்காய் துருவல்,சிகப்புமிளகாய்,பூண்டு, உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் ,பின்பு அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும் .

Sunday, October 13, 2013

நெல்லிக்காய் தொக்கு

நெல்லிக்காய் தொக்கு

தேவையானவை:
பெரிய நெல்லிக்காய்-20
நல்ல எண்ணை -1/2 கப்
கடுகு
கருவேப்பில்லை
உப்பு -தேவையானவை 
மிளகாய்பொடி -3/4 கப்
வெந்தயபொடி -1/2 ஸ்பூன்
மஞ்சள்பொடி -சிறிதளவு

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேகவிடவும் .
* நெல்லிக்காய்  நன்கு வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு  ,அதிலுள்ள கொட்டைகளை நீக்கி,நெல்லிக்காயை நன்கு மசித்து வைத்துகொள்ளவும் .
*ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு ,கருவேப்பில்லை சேர்த்து தாளித்து ,அதில் மசித்து வைத்த நெல்லிக்காய் ,மிளகாய் பொடி ,வெந்தயபொடி ,மஞ்சள் பொடி ,உப்பு ,பெருங்காய பொடி சேர்த்து நன்கு வதக்கவும் .
*நெல்லிக்காய் நன்கு வதங்கி ,எண்ணை பிரிந்து வந்ததும் இறக்கவும் .

Monday, January 28, 2013

ரவா தோசை

ரவா தோசை

தேவையானவை:
ரவா - 1 கப் 
அரிசி மாவு -1/2 கப் 
மைதா மாவு-1/4 கப் 
மிளகு -10
சீரகம்-1 ஸ்பூன் 
பச்சை மிளகாய்-2
துருவிய  இஞ்சி -1 ஸ்பூன் 
கருவேப்பில்லை-10
உப்பு
தண்ணீர்-4 கப்
  

செய்முறை:

*பாத்திரத்தில் ரவா,அரிசி மாவு,மைதா மாவு ,உப்பு , 4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*பின்பு அதில் ஒன்றிரண்டாக பொடித்த மிளகு ,சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ,இஞ்சி,கருவேப்பில்லை சேர்த்து நீர்க்க கரைத்து ,தோசை கல்லில்  மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும் .  
 

Saturday, August 18, 2012

சாம்பார் பொடி


சாம்பார் பொடி
தேவையானவை:
சிகப்பு மிளகாய்-1 கப்
கொத்தமல்லி விதை-1 /2 கப்
சீரகம்-2 ஸ்பூன்
அரிசி-2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2 ஸ்பூன்
வெந்தயம்-1 /4 ஸ்பூன்
பெருங்காயம் -சிறிதளவு
மஞ்சள் பொடி-2 ஸ்பூன்
செய்முறை:
*அனைத்து பொருட்களையும் (மஞ்சள் பொடி தவிர ) வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
*ஆறியதும் ,மஞ்சள் பொடி சேர்த்து ,மிக்ஸ்யில் நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.

Thursday, July 26, 2012

புளி சாதம்

புளி சாதம் 
தேவையானவை:
சாதம்-1 கப்
புளி காய்ச்சல் செய்வதற்கு:
புளி கரைசல்-2 கப்
மஞ்சள் பொடி-1 / 2 ஸ்பூன் 
நிலக்கடலை -1 /4 கப் 


வறுத்து பொடிக்க:
சிகப்பு மிளகாய்-10 
கொத்தமல்லி விதை-1 ஸ்பூன்
வெந்தயம்-1 /2 ஸ்பூன்
எள்ளு-1 ஸ்பூன்

தாளிக்க:
நல்லஎண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
சிகப்பு மிளகாய்
கருவேப்பில்லை
பெருகாயம்

செய்முறை:
*கடாயில் சிறிது  எண்ணை ஊற்றி ,வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை,தனி தனியாக வறுத்து, பொடித்து வைத்து கொள்ளவும்.
*கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,அதில் புளி கரைசலை ஊற்றி ,மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*புளி கரைசல் நன்கு சுண்டியதும் அடுப்பை நிறுத்தி  ,பொடித்து வைத்துள்ள பொடி,நிலக்கடலை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
*நன்கு ஆரிய சாதத்தில் தேவையான அளவு புளி காய்ச்சல் ,சிறிது  நல்லஎண்ணெய் சேர்த்து கிண்டி பரிமாறவும்.

Wednesday, June 20, 2012

வெஜிடபிள் பன்னீர்

வெஜிடபிள் பன்னீர் 
தேவையானவை:
பன்னீர் துண்டுகள்-1 கப்
இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன் 
வெங்காயம்-1
தக்காளி விழுது-1 கப்
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன் 
குடமிளகாய்-1
பச்சைபட்டாணி-சிறிதளவு
காரட்-1 
 
தாளிக்க:
எண்ணை
சீரகம் 
 
செய்முறை:
*கடாயில் எண்ணை ஊற்றி சீரகம்,வெங்காயம் சேர்த்து வதக்கவும் ,பின்பு அதில் இஞ்சி பூண்டு,தக்காளி விழுது ,மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு அதில் நறுக்கிய குடைமிளகாய்,காரட்,பச்சைபட்டாணி ,தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும்,பன்னீர் துண்டுகளை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்.