Thursday, April 29, 2010

மசாலா பணியாரம்




மசாலா பணியாரம்

தேவையானவை

இட்லி மாவு -2 கப்

காரட் ,பீன்ஸ்,பட்டாணி கலவை -1 கப்

பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது )

கரம் மசாலா பொடி -சிறிதளவு

பச்சை மிளகாய் -4 (பொடியாக நறுக்கியது )

உப்பு -தேவைகேற்ப

தாளிக்க :

எண்ணை -தாளிபதற்கு

கடுகு

உளுந்து

கருவேப்பிலை

செய்முறை :

*கடாயில் கடுகு ,உளுந்து தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் .

*வெங்காயம் வதங்கியவுடன் ,பச்சைமிளகாய் ,மசாலா பொடி ,உப்பு சேர்த்து காய்கறிகளை போட்டு வதக்கி ,அதை இட்லி மாவில் கொட்டி கிண்டி பணியாற சட்டியில் ஊற்றி இரு புறமும் வெந்ததும் எடுக்கவும்.

Monday, April 26, 2010

வடைகறி

வடைகறி
தேவையான பொருட்கள் :
வடை செய்வதற்கு :
கடலைப்பருப்பு - ஒரு கப்
சிகப்புமிளகாய்-4
பெருகாயம் -சிறிதளவு
உப்பு -சிறிதளவு
எண்ணை-பொரித்தெடுக்க தேவையானது


கறி செய்வதற்கு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு,இஞ்சி விழுது -சிறிதளவு
சாம்பார் பொடி -2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி -சிறிதளவு

அரைக்க :
 பச்சைமிளகாய் - 4
 தேங்காய் துருவல்  - 1 கப்
  இஞ்சி - சிறிதளவு

 தாளிக்க :
பட்டை,இலை,
கறிவேப்பிலை



செய்முறை :
*கடலைப்பருப்பை  ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் சிகப்புமிளகாய் ,பெருகாயம் ,உப்பு சேர்த்து  அரைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறு வடைகளாக பொரித்தெடுத்து கொள்ளவும்.

*வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து , அரிந்த வெங்காயம், தக்காளி,பூண்டு,இஞ்சி விழுது சேர்த்து வதக்கி சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி  ஆகியவற்றை  சேர்த்து எண்ணெய் பிரியும் வரை  வதக்க வேண்டும்.

*பிறகு அரைத்த தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்  கலவையை ஊற்றி ,  தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி  நன்கு கொதிக்க விடவும் .

*குழம்பு நன்கு கொதித்தவுடன் வடைகளை சிறு துண்டுகளாகி குழம்பில் போட்டு இறக்கி விடவும் .



குறிப்பு :
சாப்பிடுவதற்கு 2 மணி நேரம் முன்பே வடைகரியை செய்து வைத்துவிட வேண்டும் ,அப்போதான் வடை குழம்பில் ஊறி நல்லா இருக்கும் . 

Thursday, April 22, 2010

ஜவ்வரிசி போண்டா

ஜவ்வரிசி போண்டா


தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - 1 கப்

தயிர் - 1 கப்

பச்சைமிளகாய் -4

கடலை மாவு -1 ஸ்பூன்

அரிசி மாவு -1 ஸ்பூன்

பெ.வெங்காயம் -1

மல்லித்தழை -தேவைகேற்ப

உப்பு -தேவைகேற்ப

இஞ்சி -சிறிதளவு

பெருங்காயம் -சிறிதளவு



செய்முறை :



* ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும்.



*பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளுங்கள்



*எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள்

Tuesday, April 20, 2010

பூசணிக்காய் புளி கூட்டு

பூசணிக்காய் புளி கூட்டு


தேவையான பொருட்கள்:

பூசணிக்காய்

கொண்டைகடலை -1 கப் (முதல் நாள் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்)

துவரம் பருப்பு -1/2 கப்

புளி-சிறிதளவு

சாம்பார் பொடி- சிறிதளவு

உப்பு -தேவைகேற்ப

வறுத்து அரைக்க :

தேங்காய்

கொத்தமல்லி-3 ஸ்பூன்

சிகப்பு மிளகாய் -4

கடலை பருப்பு -1 ஸ்பூன்



தாளிக்க:

கடுகு

உளுந்து

கருவேபிள்ளை

பெருகாயம்



செய்முறை :

*ஊற வச்ச கொண்டைகடலை ,துவரம்பருப்பும் குக்கர்ல 2 விசில் வச்சு எடுத்துகனும்

* பூசணிக்காய வதக்கி தண்ணீ ஊத்தி வேகவைங்க

* பூசணிக்காய் வேந்ததுக்கபரம் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொட்டி,சாம்பார் பொடி,புளி தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும் .

*அதில் கொண்டைகடலை ,துவரம்பருப்பை கொட்டி ,உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும் *தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து இறக்கி விடவும் .

குறிப்பு :

பூசணிக்காய்கு பதிலா வாழைப்பூ ,கத்திரிக்காய் போட்டும் செய்யலாம் .

Wednesday, April 14, 2010

ரவா பணியாரம்

ரவா பணியாரம்
தேவையான பொருட்கள் :
மைதா மாவு -1 கப்
ரவா-1 கப்
வாழைபழம் -1
சர்க்கரை -1 கப்
தண்ணீர் -1 கப்


*மைதாமாவு ,சர்க்கரை ,ரவா ,தண்ணீ  கலந்து 20 நிமிடம் ஊர வக்கணும் .
*வாழைபழத மசிச்சு  ஊரவச்ச மாவுல கலந்து பணியார சட்டில ஊத்தி எடுதரனும் .

Tuesday, April 13, 2010

இனிப்பு போளி

தேவையான பொருட்கள்:


மைதா மாவு -1 கப்

உப்பு-தேவைகேற்ப

மஞ்சள் போடி -சிறிதளவு

தண்ணீர்-அரை கப்

எண்ணை-50 gm

பூரணத்துக்கு :



கடலை பருப்பு -1 கப்(தண்ணீ உத்தி 1 மணி நேரம் பருப்ப ஊற வக்கணும் )



துருவிய வெல்லம்-2 கப்

துருவிய தேங்காய்-அரை கப்

*மைதா ,உப்பு ,தண்ணீ,மஞ்ச போடி காலத்து பூரி மாவு பதத்துக்கு பிசைத்து தனியா வச்சுருக .மாவு 1 மணி நேரம் உரனும் .

*ஊறவச்ச பருப்ப எடுத்து குக்கர்ல ஒரு விசில் வச்சு,தண்ணீய வடிச்சிட்டு அதோட ,வெல்லம் ,தேங்கா போட்டு மிக்ஸில அரச்சு எடுத்துகோங்க



*அடுபுல பாத்திரத வச்சு ,அரச்ச பூரணத்த போட்டு கிண்டுங்க.வெல்லம் உருகி பூரணம் கெட்டியாகும்.



*ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல எண்ணைய தடவி மாவ சின்ன உருண்டை எடுத்து வச்சு கைல தட்டுங்க ,அது மேல பூரணத வச்சு மூடி திருப்பி போட்டு கைலையே மெலிச தட்டி தோசை கல்ல போட்டு நெய் இல்லைனா எண்ணை ஊத்தி எடுத்துருங்க