தேவையானவை:
மைதா-2 கப்
வெண்ணை-1/2 கப்
தயிர்-2 ஸ்பூன்
பேகிங் சோடா -1/4 ஸ்பூன்
சர்க்கரை-1 ஸ்பூன்
தண்ணீர்-மாவு பிசைவதற்கு
எண்ணை-பொரித்தெடுக்க
சர்க்கரை பாகு:
சர்க்கரை-1/2 கப்
தண்ணீர் சிறிதளவு
எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் மைதா,வெண்ணை,தயிர்,பேகிங் சோடா ,சர்க்கரையை சேர்த்து பிசைந்து ,அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
*மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து நடுவில் லேசாக அழுத்தி அதன் ஓரகளை படத்தில் காட்டி உள்ளது போல் மடித்து விடவும்.
*கடாயில் எண்ணை ஊற்றி பாதுஷகலை பொரித்து எடுத்து கொள்ளவும் .
*வேறொரு கடாயில் சர்க்கரை சிறிது தண்ணீர் கலந்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி,அதில் எலுமிச்சை சாரு பிழிந்து வைக்கவும்.
*பொரித்தெடுத்த பாதுஷாகளை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து தனியே வைக்கவும் .
6 comments:
superb...so colourful missed to taste it!!!
thanks nithya!!
நல்ல குறிப்பு எளிமையா இருக்கு
வாழ்த்துக்கள்
அருமையான செய்முறை விளக்கங்கள்.. வாழ்த்துக்கள்
இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ஆமினா !!
நன்றி மாய உலகம் !!
Post a Comment