மாங்காய் தொக்கு
தேவையானவை:
மாங்காய்-2 கப் (துருவியது)
நல்ல எண்ணை -1 கப்
மிளகாய் பொடி-6 ஸ்பூன்
உப்பு-3 ஸ்பூன்
வறுத்து பொடிக்க :
வெந்தயம்-1 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு
கருவேப்பில்லை
பெருங்காயம்
செய்முறை:
*வானலையில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் துருவிய மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின்பு அதில் மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு வதக்கி,அதில் வறுத்து பொடித்த வெந்தய, சீரக பொடியை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.