Showing posts with label இனிப்பு. Show all posts
Showing posts with label இனிப்பு. Show all posts

Tuesday, November 15, 2011

ஸ்ட்ராபெரி ஜாம்


ஸ்ட்ராபெரி ஜாம்
தேவையானவை:
ஸ்ட்ராபெரி -15
சர்க்கரை-1 கப்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்

செய்முறை:
*ஸ்ட்ராபெரியை சிறு துண்டுகளாக வெட்டி அதில் சர்க்கரை கலந்து நன்கு கொதிக்கவிடவும்.

*ஸ்ட்ராபெரி நன்கு வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து விடவும்.

*பின்பு அதில் எலுமிச்சை சாரு ஊற்றி கெட்டியானதும் இறக்கவும். 
 

Friday, October 21, 2011

பாதுஷா

தேவையானவை:
மைதா-2 கப்
வெண்ணை-1/2 கப்
தயிர்-2 ஸ்பூன்
பேகிங் சோடா -1/4 ஸ்பூன்
சர்க்கரை-1 ஸ்பூன் 
தண்ணீர்-மாவு பிசைவதற்கு
எண்ணை-பொரித்தெடுக்க 
சர்க்கரை பாகு:
சர்க்கரை-1/2 கப்
தண்ணீர் சிறிதளவு
எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில்  மைதா,வெண்ணை,தயிர்,பேகிங் சோடா ,சர்க்கரையை சேர்த்து பிசைந்து ,அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
*மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து நடுவில் லேசாக அழுத்தி அதன் ஓரகளை படத்தில் காட்டி உள்ளது போல் மடித்து விடவும்.

*கடாயில் எண்ணை ஊற்றி பாதுஷகலை பொரித்து எடுத்து கொள்ளவும் .
*வேறொரு கடாயில் சர்க்கரை சிறிது தண்ணீர் கலந்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி,அதில் எலுமிச்சை சாரு பிழிந்து  வைக்கவும்.
*பொரித்தெடுத்த பாதுஷாகளை சர்க்கரை பாகில்  போட்டு  எடுத்து தனியே வைக்கவும் .
*பாதுஷாக்கள் அறியதும் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.
 

Thursday, June 10, 2010

காரட் ஹல்வா

காரட் ஹல்வா (carrot halwa)
தேவையானவை:
காரட் -3 கப் (துருவியது )
பால் -3 கப் 
சர்க்கரை -1 கப் 
நெய் -2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி -சிறிதளவு
செய்முறை :
*2 ஸ்பூன் நெய்ல் துருவிய காரட் போட்டு வதக்கி ,அதில் 3 கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும் .
*பால்   நன்கு  சுண்டியதும்  சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் 
கிண்டி ,ஏலக்காய் பொடி போட்டு இறகிவிடவும் .  

Wednesday, April 14, 2010

ரவா பணியாரம்

ரவா பணியாரம்
தேவையான பொருட்கள் :
மைதா மாவு -1 கப்
ரவா-1 கப்
வாழைபழம் -1
சர்க்கரை -1 கப்
தண்ணீர் -1 கப்


*மைதாமாவு ,சர்க்கரை ,ரவா ,தண்ணீ  கலந்து 20 நிமிடம் ஊர வக்கணும் .
*வாழைபழத மசிச்சு  ஊரவச்ச மாவுல கலந்து பணியார சட்டில ஊத்தி எடுதரனும் .

Tuesday, April 13, 2010

இனிப்பு போளி

தேவையான பொருட்கள்:


மைதா மாவு -1 கப்

உப்பு-தேவைகேற்ப

மஞ்சள் போடி -சிறிதளவு

தண்ணீர்-அரை கப்

எண்ணை-50 gm

பூரணத்துக்கு :



கடலை பருப்பு -1 கப்(தண்ணீ உத்தி 1 மணி நேரம் பருப்ப ஊற வக்கணும் )



துருவிய வெல்லம்-2 கப்

துருவிய தேங்காய்-அரை கப்

*மைதா ,உப்பு ,தண்ணீ,மஞ்ச போடி காலத்து பூரி மாவு பதத்துக்கு பிசைத்து தனியா வச்சுருக .மாவு 1 மணி நேரம் உரனும் .

*ஊறவச்ச பருப்ப எடுத்து குக்கர்ல ஒரு விசில் வச்சு,தண்ணீய வடிச்சிட்டு அதோட ,வெல்லம் ,தேங்கா போட்டு மிக்ஸில அரச்சு எடுத்துகோங்க



*அடுபுல பாத்திரத வச்சு ,அரச்ச பூரணத்த போட்டு கிண்டுங்க.வெல்லம் உருகி பூரணம் கெட்டியாகும்.



*ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல எண்ணைய தடவி மாவ சின்ன உருண்டை எடுத்து வச்சு கைல தட்டுங்க ,அது மேல பூரணத வச்சு மூடி திருப்பி போட்டு கைலையே மெலிச தட்டி தோசை கல்ல போட்டு நெய் இல்லைனா எண்ணை ஊத்தி எடுத்துருங்க