கத்தரிக்காய் வேர்க்கடலை மசாலா
தேவையானவை :
கத்தரிக்காய் -5
எண்ணெய் -4 ஸ்பூன்
புளி -சிறிதளவு
வதக்கி அரைக்க :
பெரிய வெங்காயம் -1
வறுத்து அரைக்க :
கொத்தமல்லி விதை -2 ஸ்பூன்
வேர்க்கடலை -கைபிடியளவு
எள்ளு -2 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் -4
பட்டை -2
ஏலக்காய் -2
செய்முறை :
*கத்தரிக்காய் காம்பை நீக்கிவிட்டு அதன் பின்புறம் நான்காக கீரிவைகவும் .
*வெங்காயத்தை நன்கு வதக்கி அரைத்து வைத்துகொள்ளவும் .
*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை கலந்து வைத்துகொள்ளவும் .
*கத்தரிக்காயினுள் அரைத்து வைத்துள்ள மசாலாவை வைத்து ,அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிறு தீயில் மூடிவைத்து கத்தரிக்காய்களை வேகவிடவும்.(2 நிமிடத்திற்கு ஒருமுறை திருப்பிவிட்டு வேகவிடவும் )
*கத்தரிக்காய் நன்கு வெந்ததும் மீதம் உள்ள மசாலாவை ஊற்றி,உப்பு போட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும் .
*பின்பு புளி தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும் .
4 comments:
differenta irukke... vaalthukkal
LK நன்றி !!!!!!!!!!
nice& different receipe
thanks!!!!!!!!!!
Post a Comment