வடைகறி
தேவையான பொருட்கள் :
வடை செய்வதற்கு :
கடலைப்பருப்பு - ஒரு கப்
சிகப்புமிளகாய்-4
பெருகாயம் -சிறிதளவு
உப்பு -சிறிதளவு
எண்ணை-பொரித்தெடுக்க தேவையானது
கறி செய்வதற்கு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு,இஞ்சி விழுது -சிறிதளவு
சாம்பார் பொடி -2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி -சிறிதளவு
அரைக்க :
பச்சைமிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி - சிறிதளவு
தாளிக்க :
பட்டை,இலை,
கறிவேப்பிலை
செய்முறை :
*கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் சிகப்புமிளகாய் ,பெருகாயம் ,உப்பு சேர்த்து அரைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறு வடைகளாக பொரித்தெடுத்து கொள்ளவும்.
*வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து , அரிந்த வெங்காயம், தக்காளி,பூண்டு,இஞ்சி விழுது சேர்த்து வதக்கி சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
*பிறகு அரைத்த தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய் கலவையை ஊற்றி , தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் .
*குழம்பு நன்கு கொதித்தவுடன் வடைகளை சிறு துண்டுகளாகி குழம்பில் போட்டு இறக்கி விடவும் .
குறிப்பு :
சாப்பிடுவதற்கு 2 மணி நேரம் முன்பே வடைகரியை செய்து வைத்துவிட வேண்டும் ,அப்போதான் வடை குழம்பில் ஊறி நல்லா இருக்கும் .