Tuesday, April 20, 2010

பூசணிக்காய் புளி கூட்டு

பூசணிக்காய் புளி கூட்டு


தேவையான பொருட்கள்:

பூசணிக்காய்

கொண்டைகடலை -1 கப் (முதல் நாள் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்)

துவரம் பருப்பு -1/2 கப்

புளி-சிறிதளவு

சாம்பார் பொடி- சிறிதளவு

உப்பு -தேவைகேற்ப

வறுத்து அரைக்க :

தேங்காய்

கொத்தமல்லி-3 ஸ்பூன்

சிகப்பு மிளகாய் -4

கடலை பருப்பு -1 ஸ்பூன்



தாளிக்க:

கடுகு

உளுந்து

கருவேபிள்ளை

பெருகாயம்



செய்முறை :

*ஊற வச்ச கொண்டைகடலை ,துவரம்பருப்பும் குக்கர்ல 2 விசில் வச்சு எடுத்துகனும்

* பூசணிக்காய வதக்கி தண்ணீ ஊத்தி வேகவைங்க

* பூசணிக்காய் வேந்ததுக்கபரம் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொட்டி,சாம்பார் பொடி,புளி தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும் .

*அதில் கொண்டைகடலை ,துவரம்பருப்பை கொட்டி ,உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும் *தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து இறக்கி விடவும் .

குறிப்பு :

பூசணிக்காய்கு பதிலா வாழைப்பூ ,கத்திரிக்காய் போட்டும் செய்யலாம் .

No comments:

Post a Comment