தேங்காய் பால் புலாவ்
தேவையானவை:
அரிசி-2 கப்
தேங்காய் துருவல் -2 கப்
வெங்காயம் -1
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
பச்சை பட்டாணி -1 கப்
புதினா,கொத்தமல்லிதழை
தாளிக்க:
நெய் -3 ஸ்பூன்
சீரகம்
பட்டை
செய்முறை:
* தேங்காய் துருவலை நன்கு அரைத்து ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்து கொள்ளவும் .
*குக்கரில் நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துஉள்ள பொருட்களை தாளித்து ,வெங்காயம்,பச்சை மிளகாய் ,பச்சைபட்டாணி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் .
*அதில் தேங்காய் பால், அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பு,புதினா,கொத்தமல்லிதழை சேர்த்து ,குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
*தேங்காய் பால் புலாவ் , பன்னீர் மசாலா உடன் சாப்பிட நன்றாக இருக்கும் .
No comments:
Post a Comment