Thursday, February 10, 2011

கத்தரிக்காய் கீரை கூட்டு


கத்தரிக்காய் கீரை கூட்டு
தேவையானவை:
கத்தரிக்காய்-5
வெங்கயம்-2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
வெந்தய கீரை -கைபிடியளவு
வேர்கடலை -1/2 கப்
புளி கரைசல் -1 கப்
 மிளகாய் பொடி-1 ஸ்பூன்
கொத்தமல்லி பொடி-1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு
சீரகம்
கருவேப்பில்லை
சிகப்பு மிளகாய்
செய்முறை :
*கத்தரிக்காய் காம்பை நீக்கிவிட்டு அதன் அடிபுறம்  நான்காக கீறி வைக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து,வெங்காயம்,வேர்கடலை,இஞ்சி பூண்டு விழுது,போட்டு வதக்கவும் .
*பின்பு அதில் மிளகாய் பொடி,கொத்தமல்லி பொடி,கரம் மசாலா பொடி ,உப்பு சேர்த்து வதக்கி ,அதில் கத்தரிக்காய்,புளி தண்ணீர் சேர்த்து 5 நிமிடம்  கொதிக்கவிடவும்.
* பின்பு அதில் வெந்தய கீரையை சேர்த்து 15 நிமிடம் வேகவிடவும் .
*கத்தரிக்காய் நன்கு வெந்ததும் இறக்கவும்.




No comments:

Post a Comment