ரவா இட்லி (rava idli)
தேவையானவை :
ரவா -2 கப்
தயிர்-2 கப்
காரட்-1/2 கப் (துருவியது)
பட்டாணி -1/2 கப்
கொத்தமல்லி தழை-1 கப் (பொடியாக நறுக்கியது )
இஞ்சி -சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -4 (பொடியாக நறுக்கியது )
தாளிக்க :
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு
கருவேப்பிலை
சிகப்புமிளகாய்
பெருகாயம்
எண்ணெய்
செய்முறை :
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதில் ரவா சேர்த்து வாசம் வரும்வரை வறுக்கவும் .
*பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் தயிர் ஊற்றி அதில் வருத்த ரவா கலவையை கொட்டி ,
பட்டாணி ,காரட்,இஞ்சி,பச்சைமி ளகாய் ,கொத்தமல்லிதழை ,உப்பு சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைத்து , அதைஇட்லி தட்டில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும் .
குறிப்பு:
ரவாஇட்லியை வேறொரு முறையிலும் செய்யலாம் ,ரவாவை தைரில் 1மணி நேரம் ஊரவிட்டு பின்பு
தாளித்து இட்லி தட்டில் ஊற்றி எடுக்கலாம்.
No comments:
Post a Comment