Wednesday, January 11, 2012

உருளைக்கிழங்கு கோப்தா கறி


உருளைக்கிழங்கு கோப்தா கறி
தேவையானவை:
உருளைக்கிழங்கு-2 கப் (வேகவைத்து மசித்தது)
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
சோள மாவு-3 ஸ்பூன்
உப்பு-தேவைகேற்ப
கொத்தமல்லி இலை
எண்ணை-பொரித்தெடுக்க
கிரீம்-1/4 கப்.

வதக்கி அரைக்க:
வெங்காயம்-1
தக்காளி-3
மிளகாய் பொடி-1 ஸ்பூன்
கொத்தமல்லி பொடி-1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி-1 spoon
இஞ்சி,பூண்டு விழுது

தாளிக்க:
சீரகம்
கருவேப்பில்லை

செய்முறை:
*உருளைகிழங்கை வேகவைத்து,மசித்து அதனுடன் மிளகாய் பொடி,உப்பு,கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து வைக்கவும்.
*அதிலிருந்து சிறு உருண்டை எடுத்து சோள மாவில் பிரட்டி வைக்கவும்.

*அந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்.


*கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம்,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது, பொடி வகைகளை சேர்த்து வதக்கி, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.

*கடாயில் எண்ணை ஊற்றி சீரகம்,கருவேப்பில்லை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் .

*பின்பு அதில் கிரீம் சேர்த்து கொதித்ததும்,அடுப்பை நிறுத்தி ,பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து இறக்கவும்.


*உருளைக்கிழங்கு கோப்தாவை ப்ளைன் புலாவ்,சப்பாத்தி உடன் பரிமாறலாம்.



1 comment:

Suresh Subramanian said...

அருமை...

வாழ்த்துக்கள்
நல்ல பயனுல்ல தகவல்...www.rishvan.com

Post a Comment